மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே கொரோனா ...
நாட்டில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாகவும் பணப் பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதன் காரணமாக ...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களின் அட்டகாசத்தினால் விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். கலைப்பீட அவை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நேற்று ...
வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் நேற்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக் காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பட்டாணிச்சூர், பட்டைக்காட்டு பகுதியில் கஞ்சா வியாபாரம் ...
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும், வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான ஏழு ...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கம்பஹா கொத்தணி கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்ஸில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த ஒருவரால் பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தையடைந்த போது சமரச முயற்சியில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா மற்றும் பல்கலை நிர்வாகம் ஈடுபட்டபோது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் ...
கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் ...
கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்திற்கு குறித்த பெண் கொண்டு செல்லப்பட்டார். தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக ...