அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித் துள்ளது. ஏப்ரல் 20ஆம் திகதி க்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு நடை முறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை, பொதுப் போக்குவரத்தைத் ...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 438 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடு களைப் புரட்டியெடுத்துவருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் தற்போது பிரான்ஸில் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலை களைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் ...
தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கிறது. நாட்டின் இயல்பு வாழ்வு மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் ...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக் கக்கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ...
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கை மக்களின் பெரும்பாலானவர்கள் மிகப் பெரியளவில் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மக்கள் கொரோனா தடுப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்கி ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடர் வலயங்களை தவிர 19 மாவட்டங்களில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் செயலகம் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ...
கனடாவில் வசித்து வந்த தமிழ் தம்பதியொன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்திருந்தார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்ப ராணி நாகராஜா (வயது-56) ...
கொழும்புத்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் திர ட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் அயலவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இப்பாடசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்கள் வெளியாகின. சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டனர். வைத்தியசாலையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் ...