வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 5 லட்சம் ரூபாயுக்கு உட்பட்ட காசோலைகளின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கு மான சலுகைக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கோவிட் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவுடன் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரதமர், அலரி மாளிகையில் ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் ...
பளை, தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவன்காணாமற் போயிருந்த நிலையில் 6 நாட்களின் பின்னர் புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை, முள்ளியடியைச் சேர்ந்த ஆர். அனோச் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று ...
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றும் இளம் யுவதி ஒருவர் கிணறு ஒன்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம் யுவதி ஒருவரை காணவில்லை என தேடிய போது உறவினர்கள் அவரை வீட்டு கிணற்றில் அவதானித்துள்ளனர். இதனை ...
ஜாஎல பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் திகதி அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார். பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வீடு திரும்பினார் ...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினர் தவறான தகவல்களையோ அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களையோ ஒரு போதும் வெளியிடமாட்டார்களென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவதன தெரிவித்தார். அவர்கள் உண்மைகளை மறைத்து தகவல்களை வெளியிடுவதாக சில ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்கான ...
எதிர்வரும் 4ஆம் திகதி திங் கட்கிழமை அலரி மாளிகையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நிராகரித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமது நிலைப் பாட்டை விளக்கி நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில், ஜே.வி.பியின் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து ...
நீர்வேலியில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியும் தாக்கியும் மூன்று வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது. வீடொன்றில் மூன்று இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் இன்னொரு ...
பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக்கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ...