பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமானது. இதன்போது ...
தெற்கு மற்றும் மலையகத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 பேர் உயிரிழந்ததுடன், 1,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் காற்று மற்றும் மரம் முறிந்து விழுதல் என்ப வற்றின் காரணமாகவே பெருமளவான பாதிப்புக்கள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ ...
நாவற்குழிப் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பொதுவெளியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதில் பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த நபரின் சடலத்துக்கு அருகாமையில் அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ...
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், ...
தீக்காயத்துக்குள்ளான வயோதிப மாது ஒருவர் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் குண்டுவர்காடு ஒழுங்கை, மதவடி, வல்வெட்டித் துறையில் 65 வயதுடைய தவராசா இராஜேஸ்வரி என்பவரே உயிரிழந்தவராவார். தீக்காயத்துக்குள்ளான அவரை அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் ...
ஜனாதிபதி கோட்டாவின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பைத் தூண்டுவதாக குற்றம் சாட் டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக இலங்கை வழங்கிய வாக்குறுதி களை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப காலமாக அதி கரித்துக் ...
பெளத்த சமயத்தால் இலங்கை வளம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், இராணுவம் மீது சர்வதேச அமைப்புக்கள் எவையும் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என போர் வீரர்கள் விழாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றைய தினம் 11ஆவது ...
அரச படைத்தரப்பால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிந்து உணர் வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. பொது மக்கள் பங்கு பற்றி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை தெரிவித்தனர். இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் ...
அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து (2020 மே 18ஆம் திகதி) அதி காலை 2.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 ...
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஈகைச்சுடரினை இராணுவத்தினர் வீசி எறிந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி ...