நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா ...
எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய வினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று ...
முகநூல் காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞரை வழி மறித்து தாக்குதல் நடத்தியகும் பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப்பகுதியில் நேற்று நடந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் ...
மட்டுவில் சரசாலைப் பகுதியில் நேற்று அதி காலை 3 மணியளவில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் வீட்டில் அதிகாலை இடம்பெற்றுள்ளது. அயலில் உள்ள ஆலயத்தில் அலங்கார திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14ஆம் திகதி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். சந்திப்பின் ...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 61 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களாவார்கள். டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு கிரிகம தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 17 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ...
நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக் ...
கிளிநொச்சியில் டிப்பர் வாகனத் துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தாயார் உயிரிழந்ததுடன் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து, நேற்றுக் காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரிப்பர் ...
நாளை மறுதினம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் எதிர்வரும் ஜீன் 4 வியாழன், மற்றும் ஜூன் 5 வெள்ளி ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...