முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் நேற்றுக் காலை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அங்கு சென்றிருந்தனர். அதனடிப்படையில் அவரிடம் சுமார் 9 மணி நேர வாக்குமூலம் பெற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு ...
மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுங்கள். மக்களுக்கு விரைவில் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதே தற்போதைய தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சுக்கான செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 35 இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ...
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், தரம் ...
தீக்காயத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த முகமது சிராஜ் (வயது-30) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவராவார். கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்சிய போது மண்ணெண்ணெய் போத்தல் தவறிவிழுந்ததில் தீக்காயத்துக்குள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக ...
தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற கன்னி உரை ஹன்சார்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் ...
வீடு திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இதில் நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) ...
ராஜபக்ஷர்களின் குடும்பப் பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற் சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார். ...
வரணி இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் சாந்தகுமார் சதுசன் வயது 20 என்பவரே ...
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்றிட்டத்தை உரு வாக்கும் பயிற்சி திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் ...
பேத்தியின் பூப்புனித கொண்டாட்டத்தின்போது தாத்தா உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் நேற்று முன்தினம் பூப்பூனித நீராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த சமயம் பேத்தியின் நீராட்டு விழா கடமையில் இருந்த பேத்தியின் தாத்தா திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் அதே ...