கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைப் பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் 7 இலட்சத்து 17ஆயி ரத்து 7 பேர் தோற்றியிருந்தனர். இந்நிலையில் பெறுபேறுகளை ...
மேல் மாகாணம் வெலிசர கடற்படை முகாமில் மேலும் 35 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 417 (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. ...
இலங்கையில் 415ஆவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா ...
கணவாய் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியை சேர்ந்த அன்பு தாஸ் கோகுல் (வயது-11) என்ற சிறுவனே நேற்று உயிரிழந்தார். சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 18ஆம் திகதி மீன் வியாபாரி ஒருவரிடம் ...
இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 27ஆம் திகதி திங்கள் காலை 5 மணி வரை நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறி வித்தல் வரை ஊரடங்கு ...
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையியல் 170 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது. இதன் பெறுமதி பல இலட்சங்கள் என்று கூறப்படுகின்றது.
எதிர்வரும் சில நாட்கள் இலங்கைக்கு அபாயகரமானவை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரிக்கும் பட்சத்தில் நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்புவது கடினமானதாக அமையும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. ...
வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள், வேலி கம்பித் தூணுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி வின்சன் வீதி 3ஆம் கட்டை பகுதியில் நேற்று நண்பகல் இடம் பெற்றுள்ளது. இதில் அதே இடத்தினை சேர்ந்த சுந்தரம் மகேந்திரம் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார். ...
சுமார் 6 இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் சமூகத்தில் தொற்றாக ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங் கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் ...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் பொலன்னறுவையிலிருந்து நேற்றையதினம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 213 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 105 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் ...