பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்ற பருத்தித்துறை பொலிஸார் ...
உழைக்கும் மக்களுடன் சேர்ந்து கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் வெற்றி கொண்ட நாம் கோவிட்-19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க் கையை சீர்குலைத்த தில்லை. அத்தகைய நிலைமைக்கு ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்திய மூர்த்திதெரிவித்துள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஎலவைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண் ஏப்ரல் 11ஆம் திகதி முழங்காவிலில் தனிமைப் படுத்தல் ...
எரிபொருட்களை இறக்குமதி செய்வதனை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தற்பொழுது கையிருப் பில் உள்ள எரிபொருட்கள் பயன்படுத்தப்படு வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் ...
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் -பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்தார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்க்கு இந்த நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறித்த குடும்பத்திலுள்ள மூவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி யாகியிருந்தது. எனினும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. இந்த நிலையில் ...
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட் களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக் கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹவெயிடம் தெரிவித்தார். நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
கோவிட் – 19 கொரோனா வைரஸடன் மக்களை வாழ அனுமதிக்கும் தருணம் இதுவல்ல. இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கோவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் ...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்று முதல் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ள தாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்காக அந்தமான் கடற்பிராந்தியத்தை இணைந்ததாக இன்று வியாழக்கிழமை முதல் தாழமுக்க பிராந்தியம் உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி ...