ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாரா ளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ...
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய ...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான ...
சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேநேரம் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி நேற்று தெரிவு செய்யப்பட்டனர். புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் ...
பிழையான பாதையில் அரசு பயணித்தால் ஐ.தே.கவின் நிலையே ஏற்படும். சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தனது கன்னி உரையை நீதியரசர் நிகழ்த்தினார். 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் ...
பாராளுமன்றத்தின் நேற்றைய கன்னி அமர்வில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டி ருந்தபோது, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் படங்கள் பகிரப்பட்டு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கல் மடுநகர் றங்கன்குடியிருப்பு பகுதியில் தொடரும் காட்டு யானை தொல்லையால் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் 110 குடும்பங்;கள் உள்ளன. அவர்கள் ...
வவுனியா நகரசபை வளாக த்தில் நேற்று முன்தினம் நகர சபையினரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டிகளை நகர சபையினர் வழிமறித்து துவிச்சரவண்டிகளுக்கான உரிமத்தினை 15ரூபாய் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். உரிமைப்பத்திரத்தில் துவிச் ...
தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சி.சிவமகா ராசாவின் பதினான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி என்னும் கிராமத்தில் வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரால் சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட் டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடி பொருட்களை ...