அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து (2020 மே 18ஆம் திகதி) அதி காலை 2.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 ...
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஈகைச்சுடரினை இராணுவத்தினர் வீசி எறிந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி ...
முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார். யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ...
வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களேயான 17 வயது இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த ரூபன் கிருஷ்ணசாந்தி (வயது – 17) எனும் இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நெல்லியடிப் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பாக ...
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலையின் இறுதி நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் சில மணி நேரத்திலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். முச்சக்கரவண்டியில் சென்ற கொள்ளை யர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் இலக்கத்தை வைத்து கொள்ளையர்கள் இரு வரையும் ...
கோவிட் -19 வைரஸ் சமூக பரவலாக இல்லை என்பதற்காக நாட்டில் முழுமையாக கோவிட் – 19 தொற்றாளர்கள் இல்லை என்ற அர்த்தம் கொள்ளமுடியாது. எங்காவது ஒரு சிலர் எமது பரிசோதனைகளில் இருந்து விடுபட்டு நோய் அறிகுறிகள் காட்டப்படாது சமூகத்தில் நடமாடவாய்ப்புகள் உள்ளது என்கிறது தொற்று நோய் தடுப்புப்பிரிவு.தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் ...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ளகடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அதே கடற்பரப்பில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தென் வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் காரணமாக நாடு ...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாது எனவும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத சிரமமான மட்டத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ...
தற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர் பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. கோவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல் வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இலங்கை தொடர்பான தோற்றப்பாட்டையும், ...