யாழ்ப்பாணம் – அராலி துறையில் உள்ள இராணுவ முகாமில் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று முன்தினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாமில் தங்கியிராத வெளியாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வரப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகத் ...
கம்பஹா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் அண்மையில், கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளரை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்தே பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மை யில் ...
போதியளவு சுகாதார ஏற்பாடுகள் இல்லாததால் யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இராணுவத்தால் அமைக்கப்பட விருந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்காக நேற்று முன்தினம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இரு விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர், நேற்றுக் ...
ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் இந்தியாவின் வேலூர் ...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியது. கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின்படி யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் கல்லூரியில் 58 மாணவிகளுக்கு 9ஏ சித்தியும் 36 மாணிகளுக்கு 8ஏ சித்தியும் 36 மாணவிகளுக்கு 7ஏ சித்தியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றின் பெண் நீதவான் அவரது உத்தியோகபூர்வ இல் லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீதவானின் கணவர், வெலிசர கடற்படை முகாமில் சேவை யாற்றும் நிலையில் கடந்தவாரம் அவர் எம்பிலிபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கிருந்தமை தெரியவந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புத் தோட்டத்திற்கு இனந்தெரியா தோரால் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் சீனித்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவ னத்தால் நான்கு ஏக்கர் கரும்புச் ...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ரிகிலகஸ்கட பிரதேசத்தில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம் பெற்றது. மேற்படி விற்பனை நிலையத்திலிருந்த மதுபான போத்தல்களைப் பிறிதொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சிப்பதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு ...