ஜனாதிபதி செயலணிகள் இரண்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரத்தில் அமைத்தமை குறித்து மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் கலைப்பட்டு மூன்று மாதங்கள் சென்றுள்ள நிலையில் சுதந்திர மான தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய மறுத்துள்ளபோது இந்த செயலணிகள் ...
நாட்டில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் அச்சுறுத்தப்படலாம் என்கிற அச்சநிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, சட்ட நிபுணரும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவருமான சட்டத்தரணி லால் விஜேநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். கண்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக ...
இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீளவும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று ஜூன் 6ஆம் திகதி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தினமும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதிகாலை 4 ...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாயைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறிய காலப் பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப் பிடப்படுகின்றது. சீனி விலையை 100 ரூபாயாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் ...
கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான பொதுப் போக்கு வரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடம்பெறும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவைகள் ...
பாராளுமன்றத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நேற்று ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று மாலை உத்தரவிட்டது. ...
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் உத்தியோகபூர்வமான திகதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அதி ...
கோண்டாவில் காரைக்கால் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதலே நேற்று வாள்வெட்டுச் சம்பவமாக மாறியது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று மற்றொரு குழுவை நேற்று முன்தினம் தாக்கியுள்ளது. அதற்குப் பழிதீர்க்கும் ...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து வீட்டு ...
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் 32 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதில் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.