நோயற்ற நீண்டகால வாழ்வுக்கு சைவ உணவே சிறந்தது
Share
மனித உடலுக்கு ஏற்ற உணவாக கருதப்படுவது சைவ உணவே ஆகும். இதனை வள்ளுவர் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தனது நூலில் குறிப்பிட்டுள் ளார்.
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 251
இதன் பொருள்: தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் தசையை உணவாக்கிக் கொள்பவர் எப்படி அருளாளராக இருக்க முடியும்.
எமது உடம்பு கூர்ப்பின் மூலம் விருத்தியடைந்து மனித குலத்தை உருவாக்கியுள்ளது. எமது உடம்பு சைவ உணவிற்கேற்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மாமிச உணவுகளில் நியூக்ளிக் அசிற் அதிகம் காணப்படுகிறது. இது சமிபாடடைந்து பின் உருவாகும் பொருட்கள் மூலம் யூரிக் அசிற்றாக மாறுகிறது. இந்த அசிற்றினால் பல நோய்கள் உருவாகின்றன. ஆனால் மாமிசம் உண்ணும் விலங்குகளுக்குப் பாதிப்பு இல்லை.
ஏனெனில் விலங்குகளில் இந்த யூரிக் அசிற்றை நீரிலே கரையக் கூடியவாறு மாற்றுவதற்கு யூரிக் கேஸ் என்ற நொதியம் காணப்ப டுகிறது. இந்த நொதியத்தின் மூலம் யூரிக் அசிற் அலன்ரோனிக் அசிற்றாக மாறி சிறுநீருடன் வெளி யேறும். இந்த யூரிக்கேஸ் நொதி யம் மனித உடலில் காணப்படா ததால் சிறுநீரகங்களில் பாதிப்பு மற்றும் மூட்டு வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. ஆகவே சைவ உணவே சிறந்தது.
மாமிச உணவுகளை உண்ணுகின்ற விலங்கின் குடலின் நீளம் 16 அடி ஆகும். ஆனால் தாவர உணவை உண்ணுகின்ற விலங்கின் குடல் 24 அடி. மனித குடலின் நீளமும் 22 அடி. ஆகவே எமது உடம்பு தாவர உணவை உண்பதற்கே படைக்கப்பட்டுள்ளது.
1. நீண்ட கால நோய்களின் அபாயம் குறைவு
a) விலங்கு சார்ந்த உணவு களை, குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பவற்றை விடுத்து தாவரம் சார்ந்த உணவுகளை உண்ணு வது.
உதாரணமாக:
பழங்கள், முழுத்தானியங்கள், பருப்புவகைகள், நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்றன இதய இரத்தக் குழாய், நீரிழிவு நோய்கள் வருவதைத் தடுப்பதுடன் இறப்பு வீதத்தையும் குறைக் கின்றது.
b) தாவரம் சார்ந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது LDL கொலஸ்திரோல் இரத்த அழுத்தம், உடல் அழற்சி நிலை (Iflammations) போன்றவற்றைக் குறைக்கிறது. இவை அனைத் தும் இதய நோய்களை ஏற்படுத்தும் அபாய காரணிகளாகும்.
2. புற்றுநோய் அபாயம் (cancer risk)
பல ஆய்வுகள் காட்டுவது என்ன வெனில் முழுமையான தாவர உணவுகள் அதிகமாக உள்ள உணவுமுறையானது பலவகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. காரணம் நார்ச்சத்து மற்றும் antioxidants தாவர உணவுகளில் அதிகம் இருப்பதால் புற்றுநோய் அபாயம் குறைவு.
3. நீரிழிவு மற்றும் உடல்சார் மாற்றச்செயல் ஆரோக்கியம் (metabolic health)
தாவர உணவுகள் நிறைந்த உணவுமுறை இரத்தத்தில் சீனிக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவின் அபாயத்தையும் தீவிரத்தையும் குறைக்கிறது. அதிக நார் மற்றும் குறைந்த கிளை சீமிக் குறியீடு கொண்ட தாவர உணவுகள் குளுக்கோஸ் உடலில் உறிஞ்சப்படும் வேகத்தையும் குறைக்கின்றன.
4. பாதுகாப்பளிக்கும் ஊட்டச் சத்துகள் அதிகமாக உள்ளன.
தாவர உணவுகள் நார், விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர இரசாயனங்கள் (phytochemicals) ஆகியவற்றை வழங்குகின்றன. இவை பல விலங்கு சார்ந்த உணவுகளில் குறைவாகவோ அல்லது இல்லாமலோ காணப்படுகின்றன.
a) நார்சத்து (fiber)
1. சமிபாட்டை மேம்படுத்துகிறது.
2.ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் தொகுதியை (gutmicrobiome) ஆதரிக்கிறது.
3. இரத்தத்தில் சீனி அளவு மற்றும் உடல் நிறைக்கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
b)phytonutrients (polyphemol, flavonoids, carotenoids)
1.இவை antioxidant மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti – inflammatory) கொண்டவை.
2. கலங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
3. நீண்டகால நோய்களின் அபாயத்தைக்குறைக்கிறது.
உதாரணம்: சிறுநீரக நோய் (CKD), ஈரல் நோய்கள் (Cirrhosis)
5. உடல் எடை சீராக்குதல்
சைவ உணவுகள் அதிகம் உள்ள உணவு முறைகளில் சக்தி அடர்த்தி (energy density) குறைவாகவும் நார்ச்சத்து அதிக மாகவும் ,இருக்கும். இதனால் வயிற்றின் நிறை உணர்வு (satiety) அதிகரித்து மொத்தக் கலோரி உட்கொள்ளல் குறைவடைய உதவு கிறது. இது உடல் நிறையைக் குறைத்து உடல் நிறை பராமரிப்பிற்கு உதவுகிறது. இதன் மூலம் நோய்களின் அபாயம் குறைவடைகிறது.
மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாவது முழுமையான தாவர உணவுகள் அடங்கிய உணவு முறை உடல் எடையைக் குறைப்பதிலும் மாற்றச்செயல் அபாயக் காரணிகளைக் கட்டுப்படுத்துவதிலும் விலங்கு சார்ந்த உணவு முறையுடன் ஒப்பிடுகையில் அதிக செயல்திறன் கொண்டது.
6. குறைந்த உடல் அழற்சித் தன்மை மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்பாடு
a. சைவ உணவுகளில் antioxidant மற்றும் anti – inflammatory combounds கொண்டவை. இவை நீண்டகால அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
b. அழற்சி (inflammation) பல நீண்டகால நோய்களின் முக்கிய காரணிகளாகும்.
c. அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் நன்மை அளிக்கும் குடல் பக்றீரியாக்களுக்கு ஊட்ட மளித்து, நோய்எதிர்ப்புத்தன்மை மாற்றச்செயல் (metabolism) மற்றும் முழு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. ஒருங்கிணைந்த நன்மைகள்
தாவர உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அமைப்பு ஒன்றோடொன்று இணைந்து செயற்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
8. அறிவியலின் ஒருமித்த கருத்து
பெரியளவிலான மதிப்பாய்வு மற்றும் கூட்டு ஆய்வுகள் பொதுவாகக்காட்டுவது என்னவெனில் சைவ உணவுகள் அதிகமாக உட்கொள்வது,
a) குறைந்த இறப்பு வீதம் குறைந்த நோய் நிகழ்வு வீதத்துடன் தொடர்புடையதாக உள்ளது.
b) cardiac metabolism நன்மைகள் மேம்படுகின்றன.
c) சிறந்த நீண்டகால ஆரோக்கியத்தைத் தருகிறது.
குறிப்பு : உணவின் தரம் முக்கியமானது
அனைத்து தாவர உணவுகளும் சமஅளவு ஆரோக்கியமானவை அல்ல. அதிகமாக பதப்படுத்தப்பட்ட தாவர உணவுகள், சீனி அதிகமான சிற்றுண்டி, பொரித்த உணவுகள் முதலானவை பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் முழுத்தானி யங்கள் வழங்கும் அதே ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை.
சமநிலையான ஊட்டச்சத்து:
சரியாகத் திட்டமிடப்பட்ட தாவர அடிப்படையிலான உணவுமுறையில் vitamin B12, i இரும்பு, ஒமேகா-3 மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுருக்கம்
தாவர அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஏனெனில் அவை முக்கியமான அபாய காரணிகளைக் குறைக்கின்றன. உதாரணமாக அழற்சி, அதிக கொழுப்பு (கொலஸ்திரோல்), இரத்தத்தில் அதிக சீனி அளவு என்பவற்றைக் குறைத்து அதே நேரத்தில் பாதுகாப்பளிக்கும் கூறுகளை அதிகரிக்கிறது.
உதாரணம்: நார்ச்சத்து, antioxidant, phytonutrients
(தொடரும்)
தம்பிப்பிள்ளை பேரானந்தராசா
பொது வைத்திய நிபுணர்,
யாழ். போதனா வைத்தியசாலை.
.


