Type to search

Headlines Local News News

காலியில் 120 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

Share

போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 280 கிராம் 150 மில்லி கிராம் கொகேன், 100 கிராம் 10 மில்லி கிராம் ஹஷ் மற்றும் 40 கிராம் THC

போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக, குறித்த நபரிடமிருந்து 10 அமெரிக்க டொலர்கள், 250 யூரோக்கள் மற்றும் 17,570.00 ரூபா உள்நாட்டுப் பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link