இபோலா தடுப்பூசியை கண்டறிய 9 மாதங்கள் தேவை
Share
இபோலா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பூசியை தயாரிக்க மேலும் 9 மாதங்கள் தேவைப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த காலப்பகுதிக்குள் இபோலா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடுமென குறித்த ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இபோலா வைரசை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதென நம்பப்படும் இரு தடுப்பூசி வகைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதுவரை அவை ஆய்வு ரீதியான பரிசோதனைகளை பூர்த்தி செய்யவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளத.


