19 வயது பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை – யாழில் சம்பவம்
Share
வரதட்சணை கொடுமை காரணமாக யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் – நாவாந்துறை பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தான் இரு வருடங்களாக காதலித்த நபரை நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார். எனினும் கணவனின் தாயார் பெண்ணை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தங்கம், வீடு உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டு பெண்ணை சித்திரவதை செய்துவந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் ஏழ்மையான குடும்பமாக இருப்பதால் கோரிய வரதட்சணையை அவர்களால் வழங்க முடியவில்லை.
இந்நிலையில் தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப கணவனின் தாயார் முயற்சித்த நிலையில் அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டாமென உயிரிழந்த யுவதி கோரியுள்ளார். எனினும் தாயார் கேட்ட வரதட்சணையை தராவிட்டால் வெளிநாடு செல்வேன் என பெண்ணின் கணவரும் கூறியுள்ளார்.
இதனால் உளரீதியாக பாதிக்கப்பட்ட யுவதி நேற்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


