தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்
Share
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்றைய தினம் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழக முதலமைச்சராக ஜோசப் பதவியேற்றதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆதி திகதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.எனினும் வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இதுவரை இடம்பெறவில்லை.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் தரப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியில் பங்கெடுக்கப் போவதில்லையென அறிவித்தன. இதேவேளை அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் உட்பட 33 அமைச்சர்கள், அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


