Type to search

Headlines Local News News

ஹொரணையில் முத்தியோர் இல்லமொன்றில் தீ விபத்து – சடலங்கள்மீட்ப்பு!

Share

ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் நேற்று (3) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது, அங்கு 72 முதியவர்கள் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட நிவாரணச் சேவையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கடும் போராட்டத்திற்குப் பின்னர், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது, 44 முதியவர்களை எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்குப் பொலிஸாரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தீ விபத்தின் காரணமாகக் காயமடைந்த 8 பேர் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வளாகத்தில் இருந்த 11 பேர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகளின் போது அதில் சிலரது சடலங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link