Type to search

Headlines Local News News

மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி நகர எல்லைக்குள் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததாக புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று புதன்கிழமை (1) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் 11 கடை உரிமையாளர்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஏனைய 2 கடை உரிமையாளர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link