Type to search

Headlines Local News News

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

Share

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதன் மூலம், இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள IMF, 2025-ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியும், 2026 மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவீதமாகவும், உத்தியோகப்பூர்வ கையிருப்பு 7 பில்லியன் டொலர்களாகவும் முன்னேறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது. வாகன இறக்குமதி வரி வருமானம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடன் மறுசீரமைப்பு போன்றவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.

இருப்பினும், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டித்வா’ புயல் போன்ற சவால்களால் எரிசக்தி விலை உயர்வு மற்றும் சுற்றுலாத்துறை பாதிப்புகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளையும் இயற்கை பேரிடர் அபாயங்களையும் தாங்கி நின்று, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை இலங்கை அரசு மேலும் விரைவுபடுத்த வேண்டும் என IMF வலியுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link