புத்தாண்டை முன்னிட்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை! பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு
Share
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெறுவது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து அதிகாரிகளுக்கும் கடும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவதோ அல்லது அவர்கள் அவற்றை ஏற்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் விழாக்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலாக, புத்தாண்டு உபசரிப்புக்காக ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து தலா 250 ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


