Type to search

Headlines Local News News

இவ்வாண்டில் இதுவரை 35,000 ஐக் கடந்த டெங்கு நோயாளர்கள்

Share

நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அவர்களுள் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் (80%) கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி நிலையை அடுத்து நாட்டில் பெய்த பலத்த மழைவீழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து அவ்வப்போது நிலவி வரும் மழைக்கால காலநிலை காரணமாகவே, இவ்வாறு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் (05) மேலும் ஒரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனுடன் இணைந்து இந்த ஆண்டில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link