Type to search

Headlines Local News News

அம்பலாங்கொடையில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Share

அம்பலாங்கொடை, பலப்பிட்டிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, ஒரு ரவை, 16 தோட்டாக்கள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கியானது சில நாட்களுக்கு முன்னர் வேறொரு நபரால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், அந்த சந்தேகநபரும் நேற்று முன்தினம் (03) இரவு அம்பலாங்கொடை, வாத்தூவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகநபர் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

இந்த இரு சந்தேகநபர்களும் ஒரு திட்டமிட்ட குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக தெரியவந்துள்ளதுடன், ஏதோ ஒரு குற்றத்தைச் செய்வதற்கு இவர்களுக்கு இந்தத் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link