Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 3

அந்நியர்களின் வருகையால் இந்து ஆலயங்கள் அழிவுற்றன. மதம் பரப்பும் நோக்குடன் அந்நியர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நம் இந்து ஆலயங்களை இடித்து அழித்தனர்.

இதற்கு திருகோணமலை திருக்கோணேஸ்வரன் ஆலயம் மன்னார் திருக்கேதிஸ்வரம் ஆலயம், நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலயம் என்பன ஒரு சில உதாரணங்களாகும்.

இருந்தும் சைவ மக்கள் தமது சமயத்தின் மீது கொண்டிருந்த இறுக்கமான நம்பிக்கையும் பற்றுறுதியும் காரணமாக அந்நியர்கள் அழித்த ஆலயங்கள் மிகவும் எழுச்சி பெற்றன.

இதில் ஆச்சரியம் என்ன எனில், ஒரு காலத்தில் நம் ஈழத்திருநாட்டில் பிரித்தானியர்கள் எங்கள் சைவாலயங்களை இடித்து அழித்து தமது மதத்தை பரப்பினர்.

ஆனால் இன்று எங்கள் தமிழ் மக்கள் இலண்டனில் முருகனுக்கு ஆலயம் அமைத்து இலண்டன் வீதியில் தேங்காய் உடைத்து தேர் இழுத்து வாழை இலையில் வெள்ளையர்களுக்கும் அன்னம் பரிமாறுகிறார்கள் என்றால், இறை திருவருளின் வலிமையும் அற்புதமும் எத்துணை என்பதை ஒரு கணம் நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில் நம் மண்ணில் வாழை இலையில் உணவு அருந்துவதைக் கூடி அந்நியர்கள் தடுத்திருந்தனர்.

ஆனால் இன்று இலண்டன் மண்ணில் அதே வெள்ளைக்காரர்களுக்கு வாழை இலையில் அன்னம் பரிமாறும் அளவில் நிலைமை வந்துள்ளதெனில், மதமாற்றத்தால் ஆனதென்ன? என்பதை மத மாற்றத்தில் ஈடுபடுகின்றவர்கள் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆம், நம் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற அத்தனை நாடுகளிலும் சைவக் கோயில்கள் அமைக்கப்பட்டு அவை பெருங்கோயில்களால் எழுச்சி பெற்றுள்ளன.

அதிலும் பிரிட்டன் போன்ற நாடுகளில் வழிபடுவதற்கு மக்கள் வருவதில்லை என்பதால் தேவாலயங்களை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகங்கள் 99 வருடக் குத்தகைக்கு வழங்க, குறித்த தேவாலயங்களை 99 வருடக் குத்தகைக்கு பெற்று அவை சைவக் கோயில்களாக மாற்றப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

இங்கு சைவாலயங்களை இடித்த பிரிட்டி´யர் இப்போது தங்களின் தேவாலயத்தை வழங்கி அங்கு சைவக் கோயில்கள் உருவாவதற்கு உதவுகின்றார்கள் என்றால் இயற்கையின் நியதி எவ்வாறாக உள்ளதென்பதை ஆழ்ந்தகன்று சிந்திக்க வேண்டும்.

இங்குதான் சைவக்கோயில்களை இடித்து-மக்களை மதம் மாற்றுவதால் எதுவும் நடந்து விடாது என்பதை மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் சுட்டிநிற்கின்றன.

ஆக, தயவுசெய்யு இந்து உண்மையை மதம் மாறுகின்றவர்களும் மதம் மாற்றுகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மை. ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ அதுவே அவரின் தாய்ச் சமயமாகும்.

ஆம், தாய்மொழி, தாய் நாடு, தாய் வீடு என்பதை எங்ஙனம் மாற்ற முடியாதோ அதேபோன்று தான் அவரவரின் பிறப்பு எந்த சமயம் சார்ந்ததோ அதுவே அவர்களின் தாய்ச்சமயமாகும்.

ஆக, சமயம் மாறுதல் மதமாற்றம் என்பனவெல்லாம் வெறும் செப்படி வித்தைகள்.

நீங்கள் மதம் மாறுவதற்கு பிறவிச் சமயத்தை விட்டு விலகுவதற்கு நீங்கள் என்றும் உரிமையுடைவர்கள் அல்ல.

ஆம், எங்ஙனம் பெற்ற தாய்-பெற்ற தந்தை – தாய்மொழியை-தாய் நாட்டை மாற்ற முடியாதோ அதுபோலவே தாய்ச் சமயத்தையும் மாற்ற முடியாது.

இதை நாம் கூறும் போது சிலர் அது எப்படி என்று? ஆத்திரப்படலாம். ஆனால் உண்மை அது தான்.

ஆம், யாரெல்லாம் சைவ சமயத்திலிருந்து மதம் மாறிவிட்டோம் என்று கூறுகிறார்களா அதுவெல்லாம் வெறும் பிரமை. மாறாக, உங்களால் உங்கள் சமயத்தை விட்டு ஒருபோதும் விலக முடியாது.

அதனாலேயே மதம் மாறிவிட்டோம் என்று கூறுபவர்கள் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சைவத் தெய்வங்களின் படங்களை தூக்கி எறிகின்றனர்-உடைக்கின்றனர்.

சில இடங்களில் சிலர் தமது அலுவலங்களில் இருக்கக்கூடிய சுவாமிப் படங்கள் அகற்றுவிக்கின்றனர்.

ஏன்? தெரியமா அந்த சுவாமிப் படங்களில் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் மனம் அவர்களை உறுத்துகிறது.

அந்தோ! என் தந்தை தரிசித்த என் தாய் கும்பிட்ட என் முன்னவர்களெல்லாம் விரதமிருந்து வழிபட்ட சைவ கடவுள்களை வைத்துக் கொண்டு என்னால் எப்ப்டி கடமை செய்ய முடியும்.

மதம் மாறிவிட்டேன் என்று குறித்த மதமாற்றுச் சபைகளிடம் கூறிவிட்டோம்.

ஆகவே உங்களது சைவக் கடவுள்களில் நினைப்பாக இருப்பதால், வெளிப்புறத்திலேனும் நடிக்க வேண்டாமா? ஆதலால் தான் மதம் மாறுகின்றவர்கள் படங்களை அகற்றுவதன் மூலம் தங்கள் நாடகத்தை நடிப்பை – முன்னிலைப்படுத்தி மதமாற்ற சபைகளை திருப்திப்படுத்துகின்றனர்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link