Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 2

இந்து-சைவம் என்ற பாகுபாடு நம்மத்தியில் முன்னம் ஒருபோதும் இருந்ததில்லை. அஃது இடையில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு நிலையாகும்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் ‘இந்தி’ எதிர்ப்பின் நிமித்தம் ‘இந்து’ என்பதையும் எதிர்க்கத் தலைப்பட்டனர்.

இதை நாம் கூறும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினரே அவ்வாறு கூறினார்கள் என்று யாரும் கருதிவிடாதீர்கள்.

கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சைவ சமயத்தை சிந்தனை செய்கின்றவர்களாக உள்ளனர்.

அதாவது, கலைஞர் கருணாநிதி காலத்தில்கூட இல்லாத அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் ஆட்சியில் இந்து சமயம் மிக மோசமாகத் தூற்றப்படுகிறது-தாழ்த்தப்படுகிறது.

நான் ஒரு கிறிஸ்தவன் என முதல்வர் ஸ்ராலினின் மகனும் துணை முதலமைச்சருமான உயதநிதி ஸ்ராலின் கூறியிருந்தமை இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.

ஆக, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இந்து சமயம் எழுச்சி பெறுவதென்பது ஒருபோதும் சாத்தியமாகாது.

இதை இன்னும் ஆதாரப்படுத்துவதாயின், தமிழக இந்து அறநெறித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேகர் பாபு அவர்கள் ஒரு கிறிஸ்தவர்.

இந்த உண்மையை தமிழகத்தில் இருக்கக்கூடிய… என்ற கத்தோலிக்க மதகுரு மிகப் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

பிரஸ்தாப… அடிகளார் யதார்த்தமாகக் கருத்துரைக்கின்ற ஒரு பொதுநிலைவாதி.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் செயற்பாடுகளை ஆதரித்து போகின்ற .. அடிகளார் தமிழகத்தில் உள்ள ஊடகமொன்றுக்குக் கருத்துரைக்கும் போது; தமிழகத்திலுள்ள இந்துக்களைப் போல முட்டாள்களை நான் ஒரு போதும் கண்டதில்லை என்றார்.

ஆம், இந்து சமயத்தை நிந்தனை செய்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழகத்திலுள்ள இந்து மக்கள் வாக்களிக்கின்றன எனில், அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது என அருட்பணி.. அடிகளார் எழுப்புகின்ற கேள்வியில் இருக்கக்கூடிய உண்மையை-நியாயத்தை தமிழகத்து மக்கள் எப்போது தான் உணர்ந்து கொள்வார்களோ யாம்மறியோம்.

இங்கு தமிழகம் பற்றி கருத்துரைப்பது தரிசனத்தின் நோக்கமன்று.

ஆயினும் இந்து-சைவம் என்ற பிரிவினையை கொண்டிராத எங்கள் ஈழத்திருநாட்டில்; இப்போது அதன் ஊடுருவல் எங்ஙனம் வந்துள்ளதென்பதை நாம் ஆராய்ந்தறிவது அவசியம் என்ற வகையிலேயே தமிழகம் பற்றி இங்கு பிரஸ்தாபிக்க வேண்டியதாயிற்று.

ஆம், தமிழகத்தில் இருக்கக்கூடிய பழ.கருப்பையா போன்ற அரசியல்வாதிகள் இந்தி எதிர்ப்பை ஆதரிக்கும் சம நேரத்தில் சைவ சமயத்தை தொய்ய விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலையைக் கொண்டு செல்பவர்கள்.

இத்தகையவர்கள் இந்து-சைவம் என வகைமைப்படுத்தி மேடைப் பேச்சுக்களை தூற்றிக் கொள்ள, அதன்பால் ஈர்க்கப்பட்ட நம்மவர்கள் சிலர் சிவபூமியாகிய எங்கள் ஈழத்திருநாட்டிலும் இந்து-சைவம் எனப் பாகுபடுத்தும் கருத்துக்களை விதைக்கலாயினர்.

இங்கு தான் சம்பந்தப்பட்டவர்கள் இந்தக் கருத்தால் சைவ சமயத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மை. அவசியமற்று அந்து-சைவம் எனப் பிரிவினைப்படுத்தும் போது எங்கள் மண்ணில் ‘இந்து’ என்ற பெயரால் இருக்கக்கூடிய கல்லூரிகள், அமைப்புக்கள், ஆவணங்கள், நூல்கள் என அத்தனையும் கேள்விக்குட்படக்கூடியதாக ஆக்கப்படும்.

இது எங்களுக்கு நாங்களே இடக்கூடிய காலமாக இருக்கும் என்பதால், இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தினூடு இந்து-சைவம் என எமது சமயத்தைப் பாகுபடுத்தி நாமே நமக்கு பகைமையாளர்களாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை இவ்விடத்தில் முன்வைக்கின்றோம்.

இந்து ஆலயங்கள்.

இரண்டாவது தரிசனத்தின் கருப்பொருளாக இந்து ஆலயங்கள் என நாம் விழித்துக் கூறுவதற்குள் எங்களிடம் ‘இந்து’ என்ற சொற்பதம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை சுட்டுவதற்கேயாம்.

அந்தவகையில் எங்கள் இந்து ஆலயங்கள் அவற்றின் பரிபாலனங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைப்பது இத்தரிசனத்தின் நோக்கம் என ஏலவே கூறியிருந்தோம்.

இவ்வாறு இந்து ஆலயங்கள் பற்றிய நமது தரிசனம் முழுமை பெற வேண்டுமாயின், அன்றைய நாட்களின் எங்கள் இந்து ஆலயங்கள்பட்ட அவலங்கள்-அவற்றுக்கு நேர்ந்த ஆபத்துக்கள்-அவற்றின் சொத்துக்கள் மற்றுமு; நிலங்கள் கைமாறிப்போன சந்தர்ப்பங்களையெல்லாம் பிரஸ்தாபிப்பது கட்டயமானது.

ஆயினும் அஃது தரிசனத்தை விரிவுபடுத்துவதாகவும் சமகால சமய ஒற்றுமைகளுக்கு அஃது குந்தகமாக அமைந்து விடலாம் என்ற பொது நோக்கிலும் அவை பற்றி சுருக்ககமாக முன்மொழிவதநூடு தரிசனம் நகரவுள்ளது.

தொடரும்…

Previous Article
Next Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link