Artemis II வீரர்களை சந்தித்த ட்ரம்ப்
Share
அண்மையில் நிலவு பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நால்வரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அடையாளம் காணப்படும் பறக்கும் பொருட்கள், விண்வெளி படைகள் மற்றும் ஈரான் யுத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொட்ரபில் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாசா நிறுவனத்தின் ரீட் வைஸ்மன், விக்டர் க்லோவர், கிறிஸ்டினா கொக் மற்றும் கெனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஜேரம் ஹென்சன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.
விண்வெளி வீரர்கள் குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப் ‘இவர்கள் இந்த சாதனையை எவ்வாறு செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை, நான் என்றால் அதற்கு விருப்பம் தெரிவித்திருக்கமாட்டேன், எனினும் எமது நாட்டை சிறந்ததாக மாற்ற இதுபோன்ற மனிதர்கள் அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.


