717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்
Share
தமிழக மக்களின் நலன்கருதி மதஸ்தலங்கள், கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பஸ் தரிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சார காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மதுபானக் கடைகளை மூடும் தீர்மானத்தை தமிழகத்தின் சிறுபான்மை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


