சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
Share
சுமார் 48 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று (13) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 02:50 மணியளவில் சார்ஜாவிலிருந்து ஏயார் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G9-587 என்ற விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை உள்ளடக்கிய 160 சிகரெட் கார்ட்டூன்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


