Type to search

Headlines Local News News

20 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 14 சீனர்கள் கைது!

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (28) 20.73 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று இலங்கை சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (28) அதிகாலை 1.30 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து OD 297 என்ற விமானம் மூலம் வருகை தந்த 14 சீன நாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களின் 14 பயணப்பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 691 கார்ட்டன் வெளிநாட்டு சிகரெட்டுகள் (138,200 சிகரெட்டுகள்) கண்டெடுக்கப்பட்டு சுங்கக் காவலில் எடுக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க விசாரணைகளின் பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தும் அரசுடைமையாக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link