வவுனியாவில் திடீரென தடம்புரண்ட உழவியந்திரம் – இளம் குடும்பஸ்தர் பலி
Share
வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


