Type to search

Headlines Local News News

இலங்கையை வந்தடைந்தார் இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

Share

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான INDIA – 01 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வரவேற்பு அறைக்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link