Type to search

Headlines Local News News

நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – அதிகாரிகள் நேரில் ஆய்வு

Share

நிந்தவூர் கலாச்சார மண்டபம் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்தப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நேற்று (15) ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகள் குறித்த கலாச்சார மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது, கலாச்சார மண்டபத்தின் தற்போதைய நிலை, மீள ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதியின் விஜயத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link