Type to search

Headlines Local News News

சீனாவிடம் இருந்து பாடசாலைச் சீருடை நன்கொடை

Share

2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, நேற்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்  இடம்பெற்றது.

பாடசாலைச் சீருடை என்பது சாதாரணமானதொரு விடயம் அல்ல, அது கௌரவம் மற்றும் சமத்துவம் சார்ந்த விடயமாகும். இந்தச் சீருடை வழங்கும் திட்டத்தின் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்து, பிள்ளைகளுக்கு நம்பிக்கையுடன் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

அத்துடன், இலங்கையின் சீனத் தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகளும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தை எவ்வித காலதாமதமுமின்றி நிறைவேற்றுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link