Type to search

Headlines Local News News

வெசாக் விடுமுறையில் மாற்றம்! பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

Share

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான மே 31ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறை தினத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய விடுமுறை தினமாக மே 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இந்த ஆண்டுக்கான வெசாக் வாரம் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link