Type to search

Headlines Local News News

வீதியை கடக்க முயன்றவரை மோதிய கார்; சம்பவ இலடத்திலேயே பலி!

Share

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.  

குறித்த விபத்து நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது 

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link