Type to search

Headlines Local News News

மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு!

Share

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, கென்ஹத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி, வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த தனது பெற்றோரை வீட்டிற்கு அழைப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது மழை பெய்துகொண்டிருந்ததால், பெற்றோரிடம் குடையைக் கொடுத்துவிட்டு அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருவதால், இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் இருக்கும் போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link