Type to search

Headlines News World News

பானிபூரியால் நேர்ந்த விபரீதம் – 18 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Share

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையோரக் கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்கிருந்த பானிபூரி மற்றும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததே இந்த விபரீதத்திற்குப் பின்னணியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link