Type to search

Headlines Local News News

பாதுகாப்புச் செயலாளருடன் இத்தாலியத் தூதுவர் சந்திப்பு!

Share

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலியத் தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, புதிய தூதுவரை பாதுகாப்புச் செயலாளர் மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியமான இருதரப்பு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link