பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள்
Share
பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு இதன்போது மடிக்கணினிகள் (Laptops) வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 58 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் சுமார் 30 மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 98 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவைச் செலவிட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


