Type to search

Headlines Local News News

பல்கலை மாணவன் அடித்துக் கொலை

Share

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற  கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு இடையில் நேற்று (09) இரவு நடத்தப்பட்ட விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link