Type to search

Headlines Local News News

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்

Share

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. 

குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனைப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனக் குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்தக் குற்றச்சாட்டிற்கு அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link