சுவீடன் பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை!
Share
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் சுவீடன் அரசு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் 7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப மற்றும் கீழ்-நிலை இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
ஏற்கனவே பிரான்ஸ், நெதர்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் பாடசாலை கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் சுவீடனும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


