Type to search

Headlines Local News News

சுகாதார சீர்கேடான உணவகத்திற்கு சீல் – முல்லையில் சம்பவம்!

Share

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு  சீல் வைக்கப்பட்டது.

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகர் கஜலவனால் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு உணவக நிர்வாகம் சார்பில் எவரும் முன்னிலையாகாத காரணத்தால், உணவகத்தை சீல் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர்களான பிரவீன் மற்றும் கஜலவன் ஆகியோர், நீதிமன்ற உத்தரவின் பேரில் உணவகத்தை சீல் வைத்தனர்.

பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link