குளத்தில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
Share
கிளிநொச்சி – கனகாம்பிகைக் குளத்தில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.
அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டார்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


