ஒரே நாளில் 593 பேர் கைது!
Share
நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 27,042 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 229 பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும், 122 திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 121 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 88 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 3,977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


