உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட சுரேஷ் சலே
Share
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தான் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அடுத்தே, சுரேஷ் சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, சிஐடி தடுப்புக்காவலில் இருந்தபோது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி தொடர்ந்து சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


