Type to search

Headlines News World News

ஈரானை மீள் கட்டமைக்க திரண்ட பல பில்லியன் நிதி!

Share

அமெரிக்க – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானை மீள் கட்டமைப்பதற்கான 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் முதலீடுகளில் அரைவாசிக்கும் அதிக நிதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவும், ஈரானும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருகின்றது. 

இந்நிலையில் இத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாததால் பெயர் குறிப்பிட விரும்பாத ஆதாரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பிற்கும் ஒரு பொருளாதார ஊக்கத்தொகையை வழங்குவதற்காகவே இந்த நிதியம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியத்தின் இருப்பு குறித்து முன்னரே செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், இந்தத் தொகையில் அரைவாசிக்கும் அதிக தொகை ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

இது முழுமையாக தனியார் துறை நிதிகளை மட்டுமே கொண்டதாக இருக்கும் என்பதையும் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நிறுத்தவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான முக்கிய விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு கட்டமைப்பிற்கு தாம் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த புதிய நிதியமானது ஒரு தனியார் முதலீட்டு வழிமுறையாகும். 

இது ஒரு மறுசீரமைப்பு அல்லது இழப்பீட்டுத் திட்டம் அல்ல அத்துடன் இதில் எந்தவொரு அரசாங்கப் பணமும் அல்லது மானியங்களும் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்கா, மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் இதற்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link