Type to search

Editorial

ஒரு இந்து வேதமாகவும் ஒரு வேதம் இந்துவாகவும்

Share

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், நடிகர் விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகிறார்.

அவரின் இந்த வெற்றி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை எனலாம்.

உண்மை. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகத்தின் முதலமைச்சராகினார்.

எனினும் அவரின் அரசியல் பிரவேசம் என்பது பேரறிஞர் அண்ணா துரையினால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தது.

எனவே அவரின் முதலமைச்சர் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் களம் அமைத் துக் கொடுத்தது எனலாம்.

ஆனால் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தானே ஆரம்பித்து, ஆரம்பித்த உடனேயே தமிழக சட்டசபைத் தேர்தலில் களமிறங்கி தமிழகத்தின் முதலமைச்சர் பதவியைத் தனதாக்கினார் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் முன்னமும் இல்லை இனியும் இல்லை என்று கூறுமளவுக்கு மகத்தான சாதனை என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

அதேநேரம் தமிழக அரசியல் களத்தில் இறங்கிய மாத்திரத்தில் தமிழக அரசைக் கைப் பற்றுகின்ற அளவில் நடிகர் விஜய் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தார் என்பதுடன் ஏலவே இருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டிருந்தனர் என்பதையும் நாம் இங்கு கூறித்தானாக வேண்டும்.

உண்மை. திமுக ஆட்சியில் தமிழகம் மிகப் பெரும் ஊழல் மோசடிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் சந்தித்தது.

அதுதவிர, திமுக ஆதரவாளர்கள் நியாயமற்ற முறையில் எதிர்த்தரப்புகள் மீது மிக மோசமான – நாகரிகமற்ற பிரசாரங்களை மேற்கொண்டதுடன் அரசியல் ஜனநாய கத்தை இம்மியும் பின்பற்றத் தவறினர்.

அதாவது விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தணிக்கை குழு மூலம் தடை செய்தமையும் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய இடத்தை வழங்காமலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமலும் சன நெருசலில் அருமந்த உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு உடந்தையாக திமுக அரசு இருந்ததையும் கண்ணுற்ற தமிழக மக்கள் திமுகவை எதிர்த்தனர்.

அதன் உச்சக்கட்டமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது தொகுதியில் தோற்கடித்து பாடம் புகட்டினர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னை ஒரு கிறிஸ்தவர் என உதயநிதி ஸ்டாலின் அறிவிக்க, அதேவேளை ஜோசப் விஜய் தன் நெற்றியில் திருநீற்றை அணிய; தமிழக மக்கள் தங்கள் தலைவனாக விஜயை ஏற்றுக் கொண்டனர்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link