Type to search

Editorial

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

Share

சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோவடிகள் தான் படைக்கும் காப்பியத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

ஆம், “அரங்காவல் படைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” – “ஊழ்வினை ஊறுத்து வந்து ஊட்டும்” – “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”.

இம் மூன்று விடயங்களையும் எடுத்துக் கூறும் பொருட்டே சிலப்பதிகாரம் எனும் செய்யுளைப் படைக்கின்றான் என்கிறார்.

தனது இலக்கை அடையும் பொருட்டு இளங்கோ அடிகள் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் – கோவலன் – கண்ணகி ஆகிய பாத்திரங்களை எடுத்து அதனூடு கதையை நகர்த்துகின்றான்.

இங்கு தான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

இங்கு அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதன் பொருள்; அறநெறி தவறி ஆட்சி செய்கின்றவர்கள், அந்த அறம் காலனாக (யமன்) மாறி ஆட்சியாளர்களைத் தண்டிக்கும் என்பதாகும்.

இந்த உண்மையை இப்போது நாம் இந்த நாட்டின் அரசியலில் காண்கின்றோம்.

உண்மை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னைக் கைது செய்வதைத் தடை செய்யுமாறு நீதிமன்றில் முன்பிணை அனுமதி கோரியுள்ளார்.

ஏலவே வெளிநாடுகளுக்கு வெல்வதற்கான பயணத்தடையை அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு அவர் நீதிமன்றில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ஷவை கைது செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது நிரூபனமாகிறது.

இங்குதான் ஊழ்வினையும் சூழத்தலைப்பட்டுள்ளது.

அதாவது கோட்டாபய ராஜபக்ஷ ­ முன் பிணை அனுமதிக்கான விண்ண்பத்தை நீதி மன்றில் சமர்ப்பிக்காமல் விட்டிருந்தால், சில வேளைகளில் அவர் கைது செய்யப்படாமல் விடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

மாறாக நீதிமன்றத்திடம் முன்பிணை அனுமதி கேட்டு; அதனை நீதிமன்றம் நிராகரிக்குமாயின், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யாமல் விடமுடியாது என்ற கட்டாயத்திற்கு அரசு வந்து விடும்.

அதாவது கோட்டாபய ராஜபக்ஷ­க்களை கைது செய்வதை தடுக்க முடியாது என்பதாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்த பின், அவர்களைக் கைது செய்யாமல் விடுவது எப்படி.

ஆக, கோட்டாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.

எப்படி அப்போதைத் தமிழ் மக்களைக் கைது செய்து சிறையில் அடைத்து செய்த கொடுமை ஊழி வினையாகத் திரண்டு தாக்குகிறது.

இதைத்தான் முன்கூட்டியே சிலப்பதிகாரம் கூறிவைத்தது.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link