Type to search

Editorial

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஒரு மடல்

Share

உள்ளூராட்சி சபைகளான பிரதேச, நகர, மாநகர சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அன்புவணக்கம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி என்பது அந்தந்த இடங்களில் உங்களுக்கு இருக்கக்கூடியமக்கள் செல்வாக்கு எத்தகையதென்பதைச் சுட்டி நிற்பதா கும்.

தவிர, நீங்கள் மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுடன் சமூக சேவையில் ஈடுபட்டதன் வெளிப்பாடாகவும் நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.

இங்குதான் உங்கள் பதவிக்காலத்தில் நீங்கள் ஆற்றக்கூடிய பணிகளை – சேவைகளை செய்தாகுங்கள்.

தயவுசெய்து நாங்கள் சபையை ஆளுகின்றவர்கள். அவர்கள் எதிர்க்கட்சிகள் என்றோ அல்லது அவர்கள் ஆளுந்தரப்பு. எனவே அவர்களை நாங்கள் எதிர்க்க வேண்டும் என்று எதிர்த்தரப்போ நினைத்து விடக்கூடாது.

ஆம்.இன்று நம் தமிழ் அரசியல் தரப்புக் குறித்து பலரும் விசனம் தெரிவிக்கின்ற அளவில் நிலைமை வந்துவிட்டது. அதற்குக் காரணம் எவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளாமையாகும்.

ஆம், பிரதேச மட்டத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டங்களை நடத்த முடியாத அளவில் நிலைமை முற்றிவிட்டது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் என்றதும் இன்று கூத்துப் பார்க்கலாம் என்று அரச அதிகாரிகள் கூறிச் சிரிக்கின்றனரெனில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களால் ஏதேனும் பயன் ஏற்படுமா என்ன?

ஆக, சிங்கள – முஸ்லிம் மக்கள் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களை பயனுறுதிமிக்கதாக நடத்தி, தத்தம் பிரதேச – மாவட்டங்களுக்குத் தேவையான வேலைத்திட்டங்களை – அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்ற, நாங்களோ எல்லாவற்றையும் போட்டுடைக்கின்றோம்.

எனவே இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து எங்களாலும் சிறப்பாக நிர்வாகம் நடத்த முடியும். சபைகளை ஆளமுடியும் என்பதை எங்கள் உள்ளூராட்சி சபைகள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அன்புக்குரிய தவிசாளர்களே! உறுப்பினர்களே! சபை நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்கதாக நடத்துங்கள்.

உங்கள் பிரதேசங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்யுங்கள்.

மக்களை விழிப்படைய வையுங்கள். கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றுவதற்கு வழிப்படுத்துங்கள்.

ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு எனக் கன்னை பிரிந்து நிற்காமல், சேர்ந்து பணியாற்றுங்கள்.

உங்கள் பணியால், எங்கள் பிரதேசங்கள் எழுச்சி பெறும். தூய்மை பெறும். அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்களாக பரிணமிக்கும்.

இதனையே இம்மடல்ஊடாக உங்களிடம் நாம் எதிர்ப்பார்த்து நிற்கின்றோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link